ஜப்பான் மொழி

பாடம் 1 
だい 1 か


இந்த பாடத்தில் は, です、 か 、 も、 の  (particle) உபயோகம் பற்றி பார்க்க போகிறோம்.

 நாம் எதைப்பற்றி பேச போகிறோம் என்பதை முதன்மைபடுத்த உபயோகிக்கப்படும். (Object Pointer)

குறிப்பு: 
は (ஹா) வாசிக்கப்படும் பொது わ (வா) என வாசிக்கப்படும்.

です என்பது ஒரு வாக்கியத்தின் பயனிலையாக செயற்படும். அது மட்டுமில்லாமல் ஜப்பானியர்களின் கலாச்சாரம் போல மிகவும் மரியாதையாக பேசுவதை குறிக்கும்.

இவ்வாக்கிய அமைப்பு

பெயர்ச்சொல்は  பெயர்ச்சொல்  です.



உதாரணங்கள் 


முதல் வாக்கியம் 

わたし ヅシヤンテュ です。 (வதஷிவா  துஷியந்து தேஸ்.)

நான் துஸ்யந்த்.

குறிப்பு :
ஜப்பானியர்கள் அல்லாத வேறு நாட்டவர்கள் தங்கள் பெயரை கடகானவில் தான் எழுதவேண்டும்.


இரண்டாம் வாக்கியம் 

わたし がくせい です。(வதஷிவா ககுசெய் தேஸ் .)

நான் மாணவன்.


நான் மாணவனில்லை என கூற です பின்வருமாறு மாற்றமடையும்.

じゃ ありません  (ஜா அறிமாசென் ) அல்லது では ありません (தேவா அறிமாசென்) உபயோகிக்கப்படும்.

உதாரணம் 

わたし がくせいじゃ ありません。(வதஷிவா ககுசெய் ஜா அறிமசென்)

நான் மாணவனில்லை.



か 、 も、 の உபயோகம் அடுத்த பதிவில்.

சந்தேகம் மற்றும் கருத்துக்களை தெரியப்படுத்துங்கள். ஊக்கப்படுத்துங்கள்.
நன்றி 










Comments

Popular posts from this blog

ஜப்பான் மொழி

அலெக்சாண்டர்