iOS 7
iOS 7 நாளை முதல்
ஆப்பிள் நிறுவனத்தின் கைபேசிகளுக்கான புதிய இயங்குதளமான iOS 7 ஐ ஆப்பிள் நிறுவனம் மக்கள் பயன்பாட்டிற்காக நாளை வெளியிட உள்ளது. ஐபோன் வாடிக்கையாளர்களுக்கு நிச்சயம் இது புதிய அனுபவத்தை தரும் என ஆப்பிள் நிறுவனம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது.
இப்புதிய இயங்குதளம் ஐபோன் 3GS மற்றும் அதற்கும் முன் வந்த ஐபோன்களிக்கும் பொருந்தக்கூடியவை அல்ல என தெரிவித்துள்ளது. அத்துடன் iPad, iPod touch ( 4ஆம் தலைமுறை ) மற்றும் அதற்கு முந்திய பதிபுகளிற்கும் இவ் இயங்குதளம் ஒதிசைக்காது என ஆப்பிள் நிறுவனம் தெரிவித்துள்ளது.
பல ஆப்பிள் சாதனங்களிற்கு வரையறைகளுடன் இவ் இயங்குதளம் வழங்கப்படுகிறது. அதன் விபரம்:
- அகல பரப்பு காட்சி (panaroma) வசதி ஐபோன் 4S மற்றும் அதற்கு பிந்திய சாதனங்களுக்கு மட்டுமே கிடைக்கும். Square and video formats and swipe to capture போன்ற வசதிகள் ஐபோன் 4 மற்றும் அதற்கு பிறகு வந்த சாதனங்களிற்கு மட்டும் பொருந்தும்.
- Filters in Camera வசதி ஐபோன் 5 மற்றும் அதற்கு பிறகு வந்த சாதனங்களில் மட்டுமே பயன்படுத்தலாம்.
- AirDrop வசதி 5ஆம் தலைமுறை ஆப்பிள் சாதனங்களில் மட்டுமே பயன்படுத்த முடியும். இதற்கு iCloud கணக்கு தேவை.
- ஆப்பிள் சிறி (siri) செயலி ஐபோன் 4 இற்கு பிறகான அனைத்து சாதனங்களிலும் பயன்படுத்தலாம். இதற்கு இணைய இணைப்பு தேவை. இது பின்வரும் 3 மொழிகளில் மட்டுமே கிடைக்கும் U.S. English, French, and German.
- Find My iPhone வசதி தேர்வு செய்யப்பட்ட Wi-Fi களில் இனைதிருப்பின் மட்டுமே செயற்படும்.
ஆப்பளின் அனைத்து சேவைகளும் ஐபோன் 5,5c,5s சாதனங்களிலும் இனிவரும் ஆப்பிள் சாதனங்களிலும் இயங்கும்.அடுத்தவருடம் iPad களிற்கு இயங்கும் வகையில் இவ் இயங்குதளம் வெளியிடப்படும் என ஆப்பிள் நிறுவனம் தெரிவித்துள்ளது.
சில வசதிகள் சில நாடுகளில் மட்டுமே கிடைக்கும் எனவும், அதற்கான பட்டியலும் வெளியிட்டுள்ளது.
நன்றி: appadevice.com


Comments
Post a Comment